

பாட்னா
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மிகவும் துணிச்சலானது, சிந்தனையை தூண்டக் கூடியது என்று நடிகர் சத்ருகன் சின்கா திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த நடிகர் சத்ருகன் சின்கா, கடந்த பாஜக ஆட்சியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர் சித்தார். மக்களவைத் தேர்தலில் அவருக்கு பாஜக சார்பில் சீட் வழங்காததால் காங்கிரசுக்கு தாவி, பாட்னா சாஹிப் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி யடைந்தார். இப்போது, காங்கிர சில் இருக்கும் சத்ருகன் சின்கா, பிரதமர் மோடியையும் அவரது சுதந்திர தின உரையையும் திடீரென பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் சத்ருகன் சின்கா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி அவர்களே, உங்கள் சுதந்திர தின உரை மிகவும் துணிச்சலாக இருந்தது. சிந்தனையைத் தூண்டும் வகை யிலான உரையாக இருந்தது. இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியின் பேச்சு பாராட்டுக்குரியது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிப்பது, தண்ணீர் பிரச்சினை, மக்கள் தொகை கட்டுப் பாடு ஆகியவை குறித்து பிரதமர் மோடி துணிச்சலாகவும் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வையுடனும் பேசினார்.
இதற்காக மோடிக்கு பாராட்டுக் கள். நாடு சந்திக்கும் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தாமதிக்காமல் விரைவில் எடுக்க வேண்டும். அதற்கு நாடு உறுதி யாக துணை நிற்கும். இவ்வாறு சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.