Published : 19 Aug 2019 09:50 AM
Last Updated : 19 Aug 2019 09:50 AM

வன்முறைச் சம்பவங்களால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் தடை உத்தரவு

ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள். படம்: பிடிஐ

ஸ்ரீநகர்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடை பெற்றதன் காரணமாக, அங்கு மீண்டும் தடை உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித் தது. காங்கிரஸ், திரிணமூல் காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இது தொடர்பான மசோதாவும், தீர்மான மும் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டன.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப் பதற்காக அங்கு 144 தடையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக் கப்பட்டன. அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினை வாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாக காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமைதி நிலவி வந்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை முதலாக, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட் டிருந்த தடை உத்தரவுகளை மத்திய அரசு திரும்பப் பெற்று வந்தது.

வன்முறை - கலவரம்

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து நகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதில், பல பகுதிகளில் வன் முறைகளும் வெடித்தன. ராணுவத் தினர், போலீஸார் மீது போராட் டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் தடை உத்தரவுகளை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.இதேபோல், ஜம்முவின் 5 மாவட்டங்களில் இணையதள சேவைக்கும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 50 போலீஸ் நிலைய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஹஜ் பயணிக்கு சிறப்பு ஏற்பாடு

இதனிடையே, ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று காஷ்மீர் திரும்பிய யாத்ரீகர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, அவர்களுக்காக விமான நிலையத்தின் முன்பு ஏராளமான சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்தப் பேருந்துகளுக்கு மட்டும் தடை உத்தரவுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பத்திரமாக வீடு திரும்பினர்.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிர வாதிகளின் செயல்பாடுகள் உன் னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை இயக்குநர் தில்பாஹ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

காஷ்மீரில் பிரச்சினையை உருவாக்குவதற்காக தீவிரவாதி கள் முயன்று வருகின்றனர். மக்கள் மத்தியில் அச்ச உணர் வையும், ஆத்திரத்தையும் ஏற் படுத்துவதற்கான செயல்களில் அவர்கள் ஈடுபட முயற்சிக்கின்ற னர்.

எனவே, மக்களுடன் அவர்களை இரண்டற கலக்க விடாமல் போலீஸார் தடுத்து வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தில்பாஹ் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x