

ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவிருந்த ராஜ்ய சபா எம்.பி. சபீர் அலி, யாசின் பத்கலுடன் தொடர்பை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுவதற்கு தயாராக இருப்பதாக
மேலும் தன் மீதான குற்றச்சாட்டு நீங்கும் வரை தனது இணைப்பை நிறுத்திவைக்குமாறு பாஜக தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சபீர் அலிக்கும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பக்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவில் தான் இணைவற்கு எதிராக எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருப்பதால் இப்போதைக்கு அக் கட்சியில் இணையப்போவதில்லை என்றார். மேலும், இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
"பயங்கரவாதி பத்கலின் நண்பர் பாஜகவில் இணைந்தார்....விரைவில தாவூத் இணைவார் என முக்தார் அப்பாஸ் நக்வி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.