Published : 18 Aug 2019 03:53 PM
Last Updated : 18 Aug 2019 03:53 PM

ஒடிசா என்ஐடி கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய தமிழக பேராசிரியர், மனைவி தற்கொலை: கடிதம் சிக்கியது

ரூர்கேலா,

ஒடிசா மாநிலம், ரூர்கேலா நகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பேராசாரியரும், அவரின் மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரூர்கேலா மாவட்ட போலீஸ் எஸ்.பி.சர்தக் சாரங்கி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மாநிலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன்(வயது38). இவரின் மனைவி மாளவி கேசவன்(35). இதில் ஜெயபாலன் ரூர்கேலாவில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிகின்றன.

தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர் ஜெயபாலன், மனைவி மாளவி(படம் சிறப்பு ஏற்பாடு)

இருவரும் கல்லூரியில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தனர். கடந்த இரு நாட்களாக ஜெயபாலன் வசித்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் வந்து அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் முன்னிலையில் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது படுக்கையில் ஜெயபாலன் மனைவியும், குளியல் அறையில் ஜெயபாலனும் சடலமாகக்கிடந்தனர். இவர்கள் இருவரும் 30 வயதுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறோம்.

இவர்களிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதம் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடதத்தில் கடந்த 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் முடிவு எடுத்ததாகவும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று சந்தேகிக்கிறோம். உடலில் காயம் பட்டதற்கான எந்தவிதமான அடையாளங்களும் இல்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வுக்கு இருவரின் உடலும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு சாரங்கி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x