Published : 18 Aug 2019 10:11 AM
Last Updated : 18 Aug 2019 10:11 AM

தெலங்கானாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் மற்றும் இரட்டை குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற மருத்துவர்

ஹைதராபாத்

அதிக ரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் மற்றும் அவருக்கு பிறந்திருந்த இரட்டை குழந்தைகளை மருத்துவர் ஒருவர் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது ரல்லா செலுகா கிராமம். பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதிகள் இல்லை.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த சுக்கி (22) என்ற பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆனால், குழந்தைகளை பிரசவித்த சிறிது நேரத்திலேயே சுக்கிக்கு ரத்தப்போக்கு அதிகமானது. இதனால், அவர் அங்கேயே மயக்கமடைந்தார்.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மையத்தை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் அங்கு ஆம்புலன்ஸ் வர இயலாது என அதன் ஊழியர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்த தகவல், அந்த கிராமத்துக்கு அருகே உளவனூர் எனும் பகுதியில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் ராம்பாபுவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சற்றும் தாமதிக்காமல் தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்ற ராம்பாபு, அப்பெண்ணையும், இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தார். பின்னர், அந்தக் கட்டிலில் கயிறு கட்டி அங்கிருந்தவர்களின் உதவியுடன் தோளில் தூக்கிச் சென்றார்.

இவ்வாறு, 5 கிலோமீட்டர் தொலைவு வரை சுமந்து சென்ற அவர், பிரதான சாலையை அடைந் ததும் ஆம்புலன்ஸை வரவழைத் தார். பிறகு, ஆம்புலன்ஸில் அப்பெண்ணுடன் சென்று முதலுத விகள் செய்து அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்நிலையில், மருத்துவர் ராம்பாபு தனது தோளில் அப்பெண்ணையும், குழந்தை களையும் சுமந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங் களில் வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின் றன. அதேசமயத்தில், தெலங் கானாவில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x