370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட  வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது போல் இஸ்லாமிய சட்டமும் ஒழிய வேண்டும்: தஸ்லிமா நஸ்ரின்

370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட  வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது போல் இஸ்லாமிய சட்டமும் ஒழிய வேண்டும்: தஸ்லிமா நஸ்ரின்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டம் 370ம் பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்ற வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இதே போல் பெண்களுக்கு எதிரான இஸ்லாமியச் சட்டத்தையு ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

370ம் சட்டப்பிரிவு ஒழிக்கப் பட வேண்டியதுதான். அதே போல் ஷரியத் சட்டம் அல்லது இஸ்லாமிய சட்டமும் ஒழிக்கப்பட வேண்டும். 370ம் பிரிவை நீக்கிய முறைதான் பெண் விரோத இஸ்லாமியச் சட்டத்தையும் ஒழிக்கச் சிறந்த வழி. சமத்துவத்தன் அடிப்படையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

என்று எழுத்தாலர் தஸ்லிமா நஸ்ரின் ட்வீட் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முடிவுக்கு எதிர்ப்புகளும், பாராட்டுகளும் கலவையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வரவேற்றிருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in