Published : 17 Aug 2019 01:07 PM
Last Updated : 17 Aug 2019 01:07 PM

லடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் கூட பேசவில்லையே: பாஜக எம்.பி. கிண்டல்

புதுடெல்லி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லடாக் பற்றி நாடாளுமன்றத்தில் கூட பேசப்படவில்லை, ஆனால் பாஜக ஆட்சியில் ஐ.நா.வில் கூட லடாக் பற்றி பேசுவது பெருமையாக உள்ளது என அத்தொகுதியின் பாஜக எம்.பி. ஜாம்யாங் சேரிங் நாம்கியால் கூறியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியதோடு, காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியது. இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.

இதுதொடர் பாக நடந்த விவாதத்தின் போது, 370-வது பிரிவை நீக்கி யதற்கும் ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிர தேசங்களாக காஷ்மீர் பிரிக் கப்பட்டதற்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக் எம்.பி, ஜாம்யாங் சேரிங் மக்களவையில், உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

ஜாம்யாங், உரையை கேட்டு வியந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதனால் ஒரே இரவில் ஜாம்யாங் வலை தளங்களில் பிரபலமானார்.

இந்தநிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பற்றியும், இதில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் ஜாம்யாங் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமின்றி லடாக்கிற்கும் தேவையானதை மத்திய அரசு செய்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லடாக் பற்றி நாடாளுமன்றத்தில் கூட பேசப்படவில்லை, ஆனால் பாஜக ஆட்சியில் ஐ.நா.வில் கூட லடாக் பற்றி பேசுவது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x