Published : 17 Aug 2019 08:56 AM
Last Updated : 17 Aug 2019 08:56 AM

4 லட்சம் பேருக்கு வேலை: ஆந்திர முதல்வர் ஜெகன் பெருமிதம்

என்.மகேஷ்குமார்

விஜயவாடா

ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங் களில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது வர லாற்று சாதனை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நேற்று முன் தினம் 73-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தேசிய கொடியேற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளையைத் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட் டிலேயே முதன்முறையாக ஆட்சி அமைத்து வெறும் 3 மாதங்களில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனை. வியாழக் கிழமைமுதல் மாநிலம் முழுவதும் ‘கிராம தன்னார்வலர்கள்’ நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் மூலம் மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப் படும். இதேபோன்று முதன்முறை யாக மறு டெண்டர் முறையையும் அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஊழல் அறவே ஒழிக் கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெகன் பேசினார்.

முன்னதாக போலீஸ் படையின ரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x