Published : 17 Aug 2019 08:53 AM
Last Updated : 17 Aug 2019 08:53 AM

முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத்?

புதுடெல்லி

முதலாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் முப்படைகளுக் கும் தனித்தனி தளபதிகள் இருந்த னர். இதனால் முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதில் அமெரிக்காவுக்கு பல்வேறு சிரமங் கள் ஏற்பட்டன. இதை கருத்திற் கொண்டு இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கடந்த 1942-ம் ஆண்டில் அமெரிக்காவின் முப் படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக் கப்பட்டார். இந்த ராணுவ உத்தியை பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றன.

கடந்த 1962-ல் சீனாவுடன் நடந்த போரின்போது, இந்தியாவின் முப் படைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் விமானப்படை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது இந்திய கடற்படையிடம் பல் வேறு முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்காக கடந்த 1971-ம் ஆண்டில் பாகிஸ் தானுடன் நடந்த போரின்போது அன்றைய இந்திய ராணுவ தளபதி சாம் மானெக் ஷா திறம்பட செயல் பட்டார். விமானப்படை, கடற்படை தளபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுத் தார். இதுவே இந்தியா போரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

இதன்பின் கடந்த 1999-ம் ஆண் டில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது இந்தியாவின் முப் படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அவசியம் என்பதை அரசியல் தலைமையும் பாது காப்புப் படைகளும் அழுத்தமாக உணர்ந்தன.

இதுதொடர்பாக அப்போதைய துணை பிரதமர் எல்.கே.அத்வானி தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விரிவான ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஒரே தலைமைத் தளபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கார்கில் மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்தார். ஒரே தளபதி திட்டத்தை செயல் படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கினார்.

இந்த பின்னணியில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது, முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமனம் செய்யப்படுவார் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். தேச நலன் சார்ந்த இந்த திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளின்படி, ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பாதுகாப்புப் படை அதிகாரியே முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட வேண்டும். அதன்படி தற் போதைய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என்று தகவல் கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x