Published : 16 Aug 2019 12:45 PM
Last Updated : 16 Aug 2019 12:45 PM

‘‘30 நிமிடங்கள் படித்தும் புரியவில்லை’’ - 370-வது சட்டப்பிரவு திருத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபம்

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்த விவரமும் இல்லாமல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு திருத்தப்பட்டதை எதிர்த்து சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த மனுவில் ஏராளமான தவறுகள் உள்ளன. மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உத்தரவு என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள். அதில் உள்ள அம்சங்கள் என்ன, ஏன் அதனை ரத்து செய்யக் கோருகிறீர்கள். எந்த விவரமும் மனுவில் இல்லை.

என்ன மாதிரியான வழக்கு என புரியவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படக்கூடியது. ஆனால் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 5 வழக்குகள் உள்ளன. பிழைகளைச் சரி செய்து வழக்கறிஞர்கள் மீண்டும் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கோபமாகக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x