செய்திப்பிரிவு

Published : 16 Aug 2019 07:17 am

Updated : : 16 Aug 2019 07:17 am

 

‘நீட்’ பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 

neet-classes-from-next-week

சென்னை

நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

73-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந் துள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து சாரணர் இயக் கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு முதல் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடை கள் இலவசமாக வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் முழுமை யாக பயன்படுத்திக் கொள்ளப் படுவார்கள். பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டு வது குறித்த சுற்றறிக்கை விவகாரத் தில் அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எது நடைமுறையில் இருக்கிறதோ அதை பின்பற்ற வேண்டும் என்பது தான் நம் அரசின் கொள்கை. தமிழகம் முழுவதும் இலவச நீட் பயிற்சிக்கு 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும். ஏற்கெனவே, ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்வு விரைவில் நடத்தப் படும்.

இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன்நீட் பயிற்சி வகுப்புகள்பள்ளி கல்வித் துறை அமைச்சர்பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்வு

Popular Articles

You May Like

More From This Category

More From this Author