Published : 16 Aug 2019 06:47 AM
Last Updated : 16 Aug 2019 06:47 AM

ஈரான் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுதலை

புதுடெல்லி

ஈரான் சரக்கு கப்பலுடன் சிறை பிடிக்கப்பட்ட 24 இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு நேற்று விடுதலை செய்தது. இதில் 2 பேர் தமிழ கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த ஜூலை 4-ம் தேதி மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பல் 'கிரேஸ் 1'- ஐ பிரிட்டிஷ் கடற்படை சிறை பிடித்தது. அந்தக் கப்பலில் 24 இந்தியர்கள் பணியாற்றினர். கப்பலுடன் அவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பாலமுருகன், திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் குமார் ஆகியோரும் 'கிரேஸ் 1' கப்பலில் பணியாற்றினர்.

பிரிட்டிஷ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நுழைந்ததால் கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. மனிதாபிமான அடிப்படையில் 24 இந்தியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பிரிட்டனி டம் மத்திய அரசு வலியுறுத்தியது.

இதனிடையே ஈரான் அரசு தரப்பில் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரான் சரக்கு கப்பலையும் அதில் பணியாற்றிய ஊழியர்களையும் பிரிட்டிஷ் அரசு நேற்று விடுதலை செய்தது.

இந்த தகவலை இந்திய வெளி யுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் உறுதி செய்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதி வில், “ஈரான் கப்பல் 'கிரேஸ் 1'-ல் பணியாற்றிய 24 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்” என்று தெரிவித் துள்ளார்.

ஈரானின் ‘கிரேஸ் 1' கப்பலின் கேப்டன் இந்தியர் ஆவார். அவர் கூறும்போது, “எங்கள் விடுதலைக் காக பாடுபட்ட அனைத்து தரப் பினருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் சரக்கு கப்பலை விடுவிக்க வேண்டாம் என்று அமெரிக்கா தரப்பில் பிரிட்டனுக்கு கடும் அழுத்தம் தரப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து ஈரான் கப்பலையும் ஊழியர்களையும் பிரிட்டிஷ் அரசு விடுதலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x