செய்திப்பிரிவு

Published : 16 Aug 2019 06:34 am

Updated : : 16 Aug 2019 06:35 am

 

அன்றுமுதல் இன்றுவரை பதவி வகித்தவர்களில் நாட்டின் மிகச் சிறந்த பிரதமர் மோடி: கருத்துக் கணிப்பில் தகவல்

modi-is-the-best-pm-ever-says-poll

புதுடெல்லி

நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போது வரை பிரதமர்களாக பதவி வகித்தவர்களில், நரேந்திர மோடியே மிகச் சிறந்த பிரதமர் என்று கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘மக்களின் மனநிலை' என்ற தலைப்பில் இண்டியா டுடே குரூப் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ கம், ஆந்திரா உட்பட 19 மாநிலங் களில் கடந்த ஜூலை 22 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. மொத்தம் 12,126 பேரிடம் கருத்து கள் கேட்கப்பட்டன. இதில் 67 சத வீதம் பேர் கிராமங்களைச் சேர்ந்த வர்கள். 33 சதவீதம் பேர் நகரங் களைச் சேர்ந்தவர்கள். ஆண்கள் பாதி, பெண்கள் பாதி.

இந்த கருத்துக் கணிப்பில் நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரையில், யார் சிறந்த பிரதமர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதில் நாட்டின் மிகச் சிறந்த பிரதமர் நரேந்திர மோடியே என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக 37 சதவீதம் பேர் வாக்களித்தனர். முன்னாள் பிரதமர்களில் இந்திரா காந்திக்கு 14%, வாஜ்பாய்க்கு 11%, நேருவுக்கு 9%, லால் பகதூர் சாஸ்திரிக்கு 6%, ராஜீவ் காந்திக்கு 6%, மன்மோகன் சிங்குக்கு 5% சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காஷ்மீர் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் தீர்வு காண முடியும் என்று 65 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிறந்த முதல்வர் யோகி

நாட்டின் மிகச் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு பெரும்பான்மை மக்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கு 20 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அவருக்கு அடுத்து 10% வாக்குகளுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 2-ம் இடத்தில் உள்ளார். எட்டு சதவீத வாக்குகளுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் 3-ம் இடத்தில் உள்ளனர். ஏழு சதவீத வாக்குகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 4-ம் இடத்திலும் 6% வாக்குகளுடன் மேற்குவங்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5-ம் இடத்திலும் உள்ளனர்.

காங்கிரஸின் எதிர்காலம்

காங்கிரஸ் கட்சி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அடுத்தடுத்த தேர்தல் தோல்வி களால் துவண்டிருக்கும் காங்கி ரஸை யாரால் மீண்டும் துக்கி நிறுத்த முடியும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் 15 சதவீதம் பேர் பிரியங்காவை கட்சியின் தலைவர் ஆக்கலாம் என்று யோசனை கூறியுள்ளனர். அந்த கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல் காந்திக்கு 11 சதவீதம் பேரும் தற்போதைய தலைவர் சோனியா காந்திக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு அளித்தனர். வாரிசு அரசியலை இந்திய வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்று 65 சதவீதம் பேர் தெரிவித் துள்ளனர்.

சிறந்த எதிர்க்கட்சித் தலைவர்

ராகுல் காந்திக்கு பதிலாக எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருக்கு 19 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 12%, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 12%, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு 11%, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு 11%, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 9% பேரும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 8% பேரும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவுக்கு 6% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மிகச் சிறந்த பிரதமர்பிரதமர் மோடிநரேந்திர மோடிகருத்துக் கணிப்புசிறந்த முதல்வர் யோகிகாங்கிரஸ் கட்சி

Popular Articles

You May Like

More From This Category

More From this Author