Published : 15 Aug 2019 10:32 AM
Last Updated : 15 Aug 2019 10:32 AM

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடி ஏற்றுகிறார்

ஸ்ரீநகர்

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமை யாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில் ஒரு சில இடங்களில் மட்டும் தடை உத்தரவு சிறிது காலத்துக்கு இருக்கும் என்று கூடுதல் போலீஸ் ஐ.ஜி. முனீர் கான் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஸ்ரீநகரில் ஆளுநர் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு காஷ்மீர் கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையசேவைகள் முடக்கப்பட் டன. நிலைமை சீரடைந்ததை யொட்டி, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஸ்ரீநகரில் நேற்று பேட்டியளித்த கூடுதல் போலீஸ் ஐ.ஜி.முனீர்கான் கூறுகையில், ‘ஜம்முவில் கட்டுப் பாடுகள் முழுமையாக தளர்த்தப் பட்டுள்ளன. ஜம்முவில் கட்டுப்பாடு கள் நீக்கப்பட்டுவிட்டன. காஷ்மீர் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் தடை உத்தரவு சிறிது காலத்துக்கு இருக்கும். சில இடங்களில் ஒரு சிலர் மட்டுமே ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கலைத்தனர். அப்பாவி பொது மக்கள் யாரும் இறக்கவில்லை என்பதே பெரிய வெற்றி’’ என்றார்.

இந்நிலையில், சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நகரில் ஷெர்-இ-காஷ்மீர் அரங்கில் காலை நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடி ஏற்றுக்கிறார். விழா சுமூகமாக நடக்க எல்லா ஏற்பாடுகளும் ஒத்திகை நிகழ்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காஷ்மீர் தொடர் பான மத்திய அரசின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசவிரோத கருத்துக்களைக் கூறியும் வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஷா பெசல் நேற்று இஸ்தான்புல் செல்வதற்காக காஷ்மீரில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்தபோது அவரை போலீஸார் கைது செய்து காஷ் மீருக்கு திருப்பி அனுப்பினர். ஷா பெசல், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x