

என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
நடிகர் ரஜினிகாந்தின் மகாபாரத கருத்துக்கு ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மோடியும், அமித் ஷாவும் அர்ஜுனர், கிருஷ்ணர் என்றால், பாண்டவர்கள் யார்? கவுரவர்கள் யார் ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ் ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் அண் மையில் தெரிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பேசிய ரஜினி இந்தக் கருத்தை கூறினார். இதற்கு காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது எம்.ஐ.எம். கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் ஒவைசி பேசும்போது, “மோடியும், அமித் ஷாவும் அர்ஜுனர், கிருஷ்ணர் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அப்படி யானால் பாண்டவர்கள் யார்? கவுரவர்கள் யார் ? மீண்டும் ஒரு மகாபாரதப் போர் நடக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஒவைசி மேலும் பேசும்போது, “காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தவறுக்கு மேல் தவறு செய் கிறது. காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசுக்கு எந்தப் பாசமும் இல்லை. காஷ்மீர் நிலத்தின் மீதுதான் பாசம் கொண்டுள்ளது. மத்திய அரசு அதிகாரத்தை விரும்புகிறது. நீதியை விரும்பவில்லை. அதி காரத்தில் நீடிக்க வேண்டும் என்பது மட்டுமே பாஜகவினரின் விருப்பம். யாரும் சாகாவரம் பெற்ற வர்கள் இல்லை. எப்போதும் ஆட்சி செய்துக் கொண்டிருக்கப் போவதில்லை” என்றார்.