

ஓங்கோல்
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், கொப்பவரம் பகுதியில் நேற்று சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இரும்பிலான கொடிக் கம்பத்தை சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடினர். அப்போது கொடிக்கம்பம் விலகி மின்சார கம்பியின் மீது சாய்ந்தது. கொடிக் கம்பத்தை பிடித்துக் கொண்டிருந்த ஷேக் பட்டான் கவுஸ் (11), பட்டான் அமர் (11), ஹுசேன் பூடே (11) ஆகிய 3 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.