Published : 15 Aug 2019 08:48 AM
Last Updated : 15 Aug 2019 08:48 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ‘ட்வீட்’

திருவனந்தபுரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யு மாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிரமடைந்துள்ள தென் மேற்கு பருவமழையால் கேரளா முழுவதும் கடந்த 2 வாரங்களுக் கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரண மாக அம்மாநிலத்தில் கண்ணூர், வயநாடு, பத்தனம்திட்டா, கோழிக் கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மழை வெள்ளத்தால் ஆயிரக் கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இடர்களுக்கு இதுவரை 95 பேர் பலியாகியுள்ள தாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட் டோரை காணவில்லை என கூறப்படுகிறது. மாநிலத்தில் அமைக்கப்பட் டிருக்கும் வெள்ள நிவாரண முகாம்களில் 1.89 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத் துக்கு உதவக் கோரி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்பாராத கனமழையால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்க தேவை யான அனைத்து நடவடிக்கைகளை யும் கேரள அரசு எடுத்து வருகிறது.

அதேசமயத்தில், கேரள மக்களுக்கு உங்களின் உதவியும் இப்போது அவசியமாக உள்ளது. ஆனால், சில விஷமிகள் வேண்டுமென்றே ஒரு தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். அதாவது, கேரளாவுக்கு எந்த உதவியும் தேவையில்லை என்ற ரீதியில் அந்த வதந்தி உலா வருகிறது. இதனையாரும் நம்ப வேண்டாம். கேரள மக்களுக்கு உங்கள் உதவி தேவை. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளதாக கேரள அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கேரளா கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து அதிக அளவிலான நிதியுதவிகளும், பொருள் உதவிகளும் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கேரள வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்க உத்வேகம் அளிக்கும் வகையில் அவர் முகநூலில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எர்ணாகுளத்தில் துணி வியாபாரம் செய்து வரும், நவ்ஷாத் என்பவர் தியாகப் பெருநாளுக்கு முந்தைய நாளன்று, தமது கடையில் இருந்த புத்தகம், புதிய துணிகள் அனைத்தையும் நிவாரண முகாம்களுக்கு வழங்கியுள்ளார்.

இதேபோல், திருவனந்த புரத்தின் விளாத்தங்கரையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான ஆதர்ஷ், அனைத்து பள்ளிகளிலும் நிவாரண நிதி வசூலிக்கும் திட்டத் துடன் என்னை சந்தித்தார். நவ்ஷாதும், ஆதர்ஷும் தான் நமது மண்ணின் அடையாளங்கள். இவ்வாறு பினராயி விஜயன் அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x