செய்திப்பிரிவு

Published : 15 Aug 2019 08:43 am

Updated : : 15 Aug 2019 08:43 am

 

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு திருமலையில் தடை: தீவிரமாக அமல்படுத்த உத்தரவு

prohibition-of-plastic-bottles-in-tirumala

திருப்பதி

திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டில் கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

திருப்பதி நகரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 6 மாதங் களுக்கு முன்பு தடை விதிக்கப் பட்டது. தடையை மீறுவோ ருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து திருமலை யில் கடைகள், ஓட்டல்கள், மற்றும் தேவஸ்தான அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. விரைவில் ஏழுமலையானின் லட்டு பிரசாத மும் சணல் பைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் திருமலையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருமலையில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு தர்மா ரெட்டி உத்தரவிட்டார். இது குறித்து தேவஸ்தான தொலைக்காட்சி, தனியார் வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மூலம் பக்தர் களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

பவித்ரோற்சவம் நிறைவு

திருமலையில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற்றது. இதையொட்டி தினசரி மற்றும் வாராந்திர சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேவி, பூதேவி சமேதராக மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

23-ம் தேதி கோகுலாஷ்டமி

திருமலையில் வரும் 23-ம் தேதி கோகுலாஷ்டமி விழா நடத்தப்பட உள்ளதாக தேவஸ் தானம் அறிவித்துள்ளது. இதை யொட்டி திருமலையில் ஸ்ரீகிருஷ்ணர் வீதியுலா மற்றும் உட்டி திருவிழா நடைபெற உள்ளது.

பிளாஸ்டிக்பிளாஸ்டிக் பாட்டில்கள்திருமலைகோகுலாஷ்டமி

Popular Articles

You May Like

More From This Category

More From this Author