செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 13:29 pm

Updated : : 14 Aug 2019 13:29 pm

 

அந்த கேலியும் கூத்தும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாகுமா?- மோடியை சாடிய யெச்சூரி 

sitaram-yechurys-fun-and-frolic-in-corbett-barb-after-pm-s-tv-show

"அங்கே ஜிம் கார்பெட் பூங்காவில் நடந்த கூத்தும் கொண்டாட்டமும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வேர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

அதில் பிரதமர் பேசியது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டிய மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "அங்கே ஜிம் கார்பெட் பூங்காவில் நடந்த கூத்தும் கொண்டாட்டமும் கடந்த 2014 முதல் இந்த அரசு ஏற்படுத்திய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா?

இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு ஸ்திரமான பொருளாதாரத் திட்ட அறிவிப்பையும் நாங்கள் கேட்கவில்லை. சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களைத்தான் அரசு நிறைவேற்றியிருக்கிறது. முன்புபோல் ஏதோ கதைகள் கூறி பொருளாதார வளர்ச்சிக்கு சாட்சி சொல்வதுகூட நின்றுவிட்டது.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு துறை சார்ந்து வெளியாகும் சில கடினமான புள்ளிவிவரங்கள் பொருளாதார சீரழிவை உணர்த்துகின்றன. இது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியவர்கள் மக்களை வேறுபக்கம் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்" என்று அடுத்தடுத்த ட்வீட்களில் காட்டமாகக் கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.

Sitaram YechuryCorbettPM's TV Show

Popular Articles

You May Like

More From This Category

More From this Author