செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 10:20 am

Updated : : 14 Aug 2019 10:20 am

 

அதிக விலைக்கு விற்ற  ஓட்டல்களின் நிர்வாகங்களிடம் விளக்கம்: பாஸ்வான்

union-minister-ramvilas-paswan

புதுடெல்லி

மும்பையைச் சேர்ந்த கார்த்திக்தர் என்பவர் மும்பையிலுள்ள போர் சீசன்ஸ் என்ற ஸ்டார் ஓட்டலுக்கு அண்மையில் சென்று அங்கு 2 வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டுள்ளார். அதற்கு ரூ.1,700 கட்டணம் வசூலித்துள்ளது அந்த நட்சத்திர ஓட்டல். மேலும் இரண்டு அவர் சாப்பிட்ட 2 ஆம்லெட்டின் விலையும் ரூ.1700 என பில் வந்ததால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் தர், ஓட்டல் பில்லை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தி நடிகர் ராகுல் போஸ், சண்டிகரிலுள்ள ஜேடபிள்யூ மாரியட் நட்சத்திர ஓட்டலில் 2 வாழைப்பழம் சாப்பிட்டதற்கு ரூ.442 என பில் வந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் ஓட்டல்களில் அதிக விலை வைத்து விற்கும் பண்டங்கள் தொடர்பாக அந்த ஓட்டல் நிர்வாகங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “முட்டை, வாழைப்பழங்களுக்கு அதிக விலை வைத்து ஓட்டல் நிர்வாகங்கள் விற்பனை செய்வது நியாயமல்லாத வர்த்தக நடைமுறையாகும். இதற்காக அந்த ஓட்டல் நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்படும்” என்றார்.

- பிடிஐ

அதிக விலைவேக வைத்த முட்டைகள்ஓட்டல் பில்நடிகர் ராகுல் போஸ்2 வாழைப்பழம்மத்திய அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வான்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author