Published : 14 Aug 2019 09:51 AM
Last Updated : 14 Aug 2019 09:51 AM

ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றும் 2 பெண் அதிகாரிகள்

யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்படுவதற்கு 4 நாட்கள் முன்பு, அங்கு தகவல் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் சையது செரிஷ் அஸ்கர்.

ஐஏஎஸ் அதிகாரியான இவரது பணி, அரசுத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது ஆகும். ஆனால் கடந்த 8 நாட்களாக இவர் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். பல நூறு கி.மீட்டருக்கு அப்பால் உள்ள தங்கள் குடும்பத் தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும், உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெறவும் உதவி வருகிறார். இதுபோல் ஸ்ரீநகரில் நேரு பார்க் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பி.கே.நித்யா. ஐபிஎஸ் அதிகாரி யான இவர், ஸ்ரீநகரில் ராம் முன்ஷி பாக் பகுதி முதல் ஹர்வன் டாக்ச்சி கிராமம் வரையிலான பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரே பெண் ஐஏஎஸ் மற்றும் ஒரே பெண் ஐபிஎஸ் அதிகாரியாக இவர்கள் பணியாற்றி வருகின்றனர். எம்பிபிஎஸ் முடித்துள்ள செரிஷ் அஸ்கர் கூறும்போது, “ஒரு மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தேன். ஆனால் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறேன்” என்றார்.

பிடெக் (கெமிக்கல் இன்ஜினீயரிங்) முடித்துள்ள நித்யா கூறும் போது, “பொதுமக்கள் பாதுகாப்பு தவிர விவிஐபி-களுக்கான பாது காப்பையும் மேற்பார்வையிடு கிறேன். சத்தீஸ்கரில் எப்போது அமைதி நிலவும் துர்க் பகுதியை சேர்ந்தவள் நான். எனது சத்தீஸ்கர் வாழ்க்கையை விட முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை இப் போது. என்றாலும் சவால்களை நான் விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x