செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 07:58 am

Updated : : 14 Aug 2019 07:58 am

 

பாகிஸ்தான் நாட்டுக்கு முஸ்லிம் அறிஞர் அறிவுரை

muslim-scholar-advises-pakistanis

புதுடெல்லி

‘காஷ்மீர் விவகாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும்’ என்று பாகிஸ்தானுக்கு பிரபல முஸ்லிம் அறிஞர் முஹமத் தவ்ஹிதி அறிவுரை கூறியுள்ளார்.

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கும் ஜம்மு காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரபல முஸ்லிம் அறிஞரும், தன்னை மத சீர்த்திருத்தவாதி என்று கூறிக் கொள்பவருமான இமாம் முஹமது தவ்ஹிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் முஹமத் தவ்ஹிதி கூறுகையில், ‘‘காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. எதிர்காலத்தில் இருக்கப் போவதும் இல்லை. பாகிஸ்தானே இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான். பாகிஸ்தானும் காஷ்மீரும் இந்தியாவைச் சேர்ந்தவை. இந்துக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதால், ஒட்டுமொத்த பகுதியும் இந்து நிலம் என்ற உண்மை மாறாது. முஸ்லிம் மதத்தைவிட இந்தியா பழமையானது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நேர்மையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்முஸ்லிம் அறிஞர்காஷ்மீர்காஷ்மீர் விவகாரம்யூனியன் பிரதேசங்கள்ஆஸ்திரேலியா

Popular Articles

You May Like

More From This Category

More From this Author