Published : 14 Aug 2019 07:53 AM
Last Updated : 14 Aug 2019 07:53 AM

டிஸ்கவரி டிவி சேனல் நிகழ்ச்சி: 18 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் முதல் சுற்றுலா

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. அப்போது தொலைக்காட்சி முன்பாக ஒரு பெண் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.படம்: ஏஎப்பி

புதுடெல்லி

அமெரிக்காவை சேர்ந்த டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சி யின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து மக்களுக்கு கற்றுத் தருகிறார்.

இதில் அவ்வப்போது பிரபலங் கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி களும் ஒளிபரப்பாகும். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவின் அலாஸ்கா வனப்பகுதியில், பியர் கிரில்ஸும் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஜிம் கார்பெட் பூங்கா

இந்த வரிசையில் பியர் கிரில்ஸும் இந்திய பிரதமர் நரேந் திர மோடியும் உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் சாகச காட்டுப் பயணம் மேற்கொண்ட 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆங் கிலம், இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

தனக்கே உரித்தான பாணியில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவுக்கு பியர் கிரில்ஸ் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சுமார் 6 கி.மீ. நடந்து சென்றார். வழி நெடுக புலிகள், யானைகள், முதலை கள் என கார்பெட் பூங்காவின் ஆபத்துகளை விவரித்துக் கொண்டே அவர் நடந்தார். குறிப் பிட்ட இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜீப்பில் கம்பீரமாக வந்து இறங்கினார்.

மோடியின் பால்ய பருவம்

பியர் கிரில்ஸை வரவேற்ற பிரத மர், ஜிம் கார்பெட் பூங்கா பற்றி சிறிய விளக்கம் அளித்தார். 100 மொழி கள், 1,600 வட்டார மொழிகள் கொண்ட இந்தியாவை போன்று ஜிம் கார்பெட் பூங்காவுக்கும் பன் முகத்தன்மை இருக்கிறது என்று மோடி கூறினார். அப்போது இடி சப்தம் கேட்டு 'இது இயற்கையின் மொழி' என்று பியர் கிரில்ஸ் பதிலளித்தார்.

இருவரும் தங்களது சாகச காட்டுப் பயணத்தை தொடங்கினர். அப்போது மோடியின் பால்ய பருவம் குறித்து கிரில்ஸ் கேட்க, நடைபயணத்தோடு தனது வாழ்க்கை பயணத்தையும் மோடி விவரித்தார்.

'சொந்த ஊர், குஜராத்தில் உள்ள வாத் நகர். சிறிய வீடு. ஏழ்மையான குடும்பம். அரசுப் பள்ளியில் படித் தேன். இயற்கையோடு ஒன்றி வாழ்ந் தேன். அடுப்பு கரியை பயன்படுத்தி துணிகளை அயர்ன் செய்து உடுத்துவேன். சிறு வயதில் படித்துக் கொண்டே எனது தந்தையின் டீ கடையில் பணியாற்றினேன்' என்று பிரதமர் தெரிவித்தார்.

இமய மலை அனுபவம்

பேசிக் கொண்டே நடக்கும் போது, யானையின் கழிவை கிரில் ஸிடம் மோடி சுட்டிக் காட்டினார். 'யானை ஒன்று இப்போதுதான் இந்த வழியை கடந்து சென்றிருக்கிறது' என்று மோடி கூற, கிரில்ஸ் அதை உறுதி செய்தார்.

ஜிம் கார்பெட் பூங்காவில் புலிகள் அதிகம். மறைந்திருந்து தாக் கும் புலிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மரக்குச்சி, கத்தியை கொண்டு மோடியின் உதவியுடன் ஈட்டி போன்ற ஆயுதத்தை கிரில்ஸ் தயார் செய்தார்.

'சிறுவயதில் மலைப்பகுதிக்கு வந்திருக்கிறீர்களா' என்று கிரில்ஸ் கேட்க, '17 வயதில் இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற் கொண்டேன். அதன்பின் பலமுறை இமயமலைக்கு சென்றிருக்கிறேன். சாதுக்களை சந்தித்துள்ளேன். இயற்கைக்கு இடையூறு செய்யா மல் அவர்கள் வாழ்கின்றனர். எனது இமயமலை பயணம் ஓர் அற்புத மான அனுபவம்' என்று பிரதமர் பதிலளித்தார்.

இருவரும் 8 கி.மீ. தொலைவு நடந்து அங்குள்ள நதியை அடைந் தனர். அப்போது மோடியின் அரசி யல் வாழ்க்கை குறித்து கிரில்ஸ் ஆர்வமாக கேள்வி எழுப்பினார்.

'குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினேன். மக்களின் தீர்ப்பால் இப்போது 5 ஆண்டுகள் பிரதமராக இருக் கிறேன். கடந்த 18 ஆண்டுகளில் இதுதான் எனது முதல் சுற்றுலா' என்று மோடி பதிலளித்தார்.

பின்னர், கிரில்ஸ் உருவாக்கிய சிறிய நாணல் படகில் இருவரும் நதியை கடந்தனர். 'இந்த நதி ஆபத் தானது. முதலைகள் நிறைந்தது' என்று கிரில்ஸ் எச்சரித்தார்.

அப்போது தனது பால்ய பரு வத்தை நினைவுகூர்ந்த மோடி, 'சிறுவயதில் குளத்தில் குளிக்கும் போது ஒரு முதலை குட்டியை பிடித்து வீட்டுக்கு கொண்டு சென் றேன். எனது தாயார் கண்டிக்கவே முதலை குட்டியை மீண்டும் குளத் தில் விட்டுவிட்டேன். எங்கள் ஊரில் மழை பெய்யும்போதெல்லாம் எனது தந்தை அஞ்சல் அட்டை மூலம் சுமார் 30 உறவினர்களுக்கு தெரியப் படுத்துவார். அப்போது எனக்கு எதுவும் புரியாது. இப்போதுதான் மழையின் மகத்துவம் புரிகிறது' என்றார்.

பயமா.. எனக்கா...

'மேடை ஏறும்போது பதற்றமடை வீர்களா' என்று கிரில்ஸ் கேட்க, ‘பயமா.. எனக்கா..இதுவரையில் எதற்கும் பயந்தது கிடையாது. பயம் என்றால் என்னவென்றே தெரியாது' என்று மோடி கூறினார்.

‘இதுபோன்ற படகில் பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமர் நீங்கள்தான்' என்று கிரில்ஸ் கூற, 'இதெல்லாம் சர்வ சாதாரணம், இமயமலை பயணத்தில் இது போன்ற சூழல்களை ஏற்கெனவே சந்தித்து இருக்கிறேன்" என்றார்.

சிறிய படகில் இருவரும் நதியை வெற்றிகரமாக கடந்தனர். நதிக் கரை யில் வெந்நீரில் வேப்ப இலையை போட்டு அந்த சாற்றை அருந்தினர்.

அப்போது மோடி கூறியபோது, 'சுயநலத்துக்காக வனங்களை அழிக்கிறோம். சுற்றுச்சூழலை காக்க வேண்டிய பொறுப்பு அனை வருக்கும் உள்ளது. வனங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லை யெனில் நமது பிள்ளைகள் நம்மை கேள்வி கேட்பார்கள்' என்றார். இறுதியில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளுடன் விடைபெற்றனர்.

பிரதமரை நேரில் சந்திக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சி 180 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோடிக்கணக்கானோர் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை 'Narendra Modi App' மூலம் அனுப்பலாம். இதில் மிகச் சிறந்த ஆலோசனை வழங்குவோர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x