

திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம், இதனை தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, நேற்று பக்ரீத் விடுமுறை என 4 நாட்கள் விடுமுறை வந்ததால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
நேற்று சுமார் 20 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலை யானை தரிசனம் செய்தனர். திருமலையில், வருடாந்திர பவித் ரோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை சுப்ரபாத சேவை மட்டும் ஏகாந்தமாக நடத்தப்பட் டது. மற்ற அனைத்து சேவை களும் முழுமையாக ரத்து செய் யப்பட்டன. நேற்றும் இன்றும் விஐபி பிரேக் தரிசனம் முழுமை யாக ரத்து செய்யப்பட்டது.