

ஸ்ரீநகர்
காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது. காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர். காஷ்மீர் முழுவதும் திங்கள்கிழமை பக்ரீத் மிகவும் அமைதியாக கொண்டாடப் பட்டது.
காஷ்மீர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. காங் கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்மறையான கருத்து களை கூறியுள்ளார்.
ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு வந்து நிலை மையை நேரில் பார்வையிடலாம். மருத்துவமனைக்கு சென்று அங் குள்ளவர்களிடம் பேசலாம். காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர் கூட காயமடையவில்லை. காஷ் மீருக்கு வருவதற்கு ராகுல் தயாரா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.