

பெங்களூரு
கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 3 லட்சம் கன அடியில் இருந்து 84 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்ததால் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந் தது. 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை 121 அடியை தொட்டது. அணை முழு கொள்ளளவை நெருங்கிய தால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.53 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இதே போல காவிரியின் முக்கிய துணை நதியான கபிலா உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட் டம் 2,282.80 அடியாக உயர்ந்தது. இதனால் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தால் கரையோர கிராமங்கள் வெள் ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.நகர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நேற்று முன்தினம் திறக்கப்பட்ட 3 லட்சம் கன அடி நீர் நேற்று இரவு தமிழக எல்லையான பிலிகுண்டுலு அளவை நிலை யத்தை வந்தடைந்தது.
இதனிடையே நேற்று கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 49 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 84 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு செல்கிறது.