அப்துல்
அப்துல்

தெலங்கானா மாநிலத்தில் ஷேர் ஆட்டோவில் 24 பேரை ஏற்றிச் சென்ற ஓட்டுநர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Published on

கரீம்நகர்

தெலங்கானாவில் ஷேர் ஆட்டோவில் 24 பயணிகளை அதன் ஓட்டு நர் ஏற்றிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அப் துல். இவர் நேற்று தனது ஆட் டோவில் பயணிகள் பலரை ஏற்றிக் கொண்டு கரீம் நகரிலிருந்து திம் மாபூருக்கு சென்று கொண் டிருந்தார்.

இந்த ஆட்டோவை போக்கு வரத்து போலீஸார் வழியில் மடக்கினர். ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்த அனை வரையும் கீழே இறக்கினர்.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இவ்வளவு பயணி களை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டு நரை எச்சரித்தனர். அபாயகரமான பயணம் செய்யக் கூடாது என பயணிகளுக்கும் அறிவுறுத்தினர்.

மேலும் இந்தக் காட்சிகள் அனைத்தையும் செல்போனில் படம் பிடித்தனர்.

இந்த வீடியோ காட்சிகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் கரீம்நகர் போலீஸ் ஆணை யர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in