Published : 12 Aug 2019 03:45 PM
Last Updated : 12 Aug 2019 03:45 PM

தண்ணீர் ஓவர் டேங்க் உடைந்து விழுந்து விபத்து: அகமதாபாத்தில் 3 பேர் பலி, 6 பேர் காயம்

அகமதாபாத் நகரில் தண்ணீர் டேங்க் ஒன்று உடைந்து அருகில் இருந்த பிளாட்டில் விழ அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சமையல் பணியாளர்கள் 3 பேர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர்.

நகரின் போபால் பகுதியில் இந்த ஓவர்ஹெட் தண்ணீர் டாங்க் விபத்து ஏற்பட்டது, கடந்த வார கனமழையினால் இது பலவீனமடைந்து உடைந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து 9 பேர் அருகில் இருந்த சோலா சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

“இதில் 3 பேர் வரும் வழியிலேயே இறந்து விட்டனர், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 பேரினது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளஹ்டு” என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.எம்.ஜிதியா தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் விக்ராந்த் பாண்டே தெரிவித்தார்.

“இந்த தண்ணீர் ஓவர் டேங்க் 1997-ல் நகராட்சியினால் கட்டமைக்கப்பட்டது. இது மண்சரிவு காரணமாக உடைந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, விசாரணை முடிவுகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஆட்சியர் விக்ராந்த் பாண்டே.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x