

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை யாரோ ஒருவர், ஷேக்ஸ்பியர் தோற்றத்தில் சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த புகைப்படத்தை சசி தரூர் எம்.பி. ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
"சமூக வலைதளத்தில் எனது புகழ்பாடும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. யாரோ ஒருவர் என்னை ஷேக்ஸ்பியராக சித்தரித்து அவரது தோற்றத்துக்கு மாற்றியுள்ளார் (அதற்கு நான் தகுதியானவன் கிடையாது). இதன்மூலம் புதிய பிரச்சினையையும் கொளுத்தி போட்டிருக்கிறார்.
யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு நன்றி" என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நிறைய பேர் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். கார்த்திக் ஜே என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஷேக்ஸ்பியர் மாதிரி ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள். உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். வினய் யாதவ் என்பவர் கூறியபோது, நீங்கள் இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று தெரிவித்துள்ளார்.