

அலிகார்
உத்தரபிரதேசத்தில் முத்தலாக்கை எதிர்த்து பேசிவரும் முஸ்லிம் பெண்ணின் கணவர் மீது மர்ம நபர் கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத் துடன் மனைவியை கண்டித்து வைக் கும்படி மிரட்டல் விடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது மோசின். இவருடைய மனைவி பர்ஹீன் மோசின். இவர் அலிகார் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவ ராக இருக்கிறார். முத்தலாக் நடை முறையை எதிர்த்து பல கூட்டங் களில் பர்ஹீன் பேசி வருகிறார். அத்துடன், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளிலும் பங் கேற்று வருகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் பர்ஹீனின் கணவர் முகமது மோசினை அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்து முகமது மோசின் கூறும்போது, ‘‘நான் எனது அலுவலகத்தில் இருந்த போது 8 பேர் திடீரென உள்ளே புகுந்து என்னை தாக்கினர். மேலும் ‘உங்கள் மனைவி முத்தலாக்கை எதிர்த்து எதுவும் பேசக் கூடாது என்று கண்டித்து வையுங்கள்’ என்று மிரட்டினர். பாஜக.வுக்கு உங்கள் மனைவி வேலை செய்ய விடமாட்டோம் என்றும் மிரட்டினர்’’ என்றார்.
இதையடுத்து அலிகார் போலீஸில் பர்ஹீன் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக மூத்த போலீஸ் அதிகாரி அபிஷேக் நேற்று கூறினார்.
இதுகுறித்து பர்ஹீன் கூறியதாவது:
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், முஸ்லிம் பெண்கள் பலர் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர். அவர்களை பாஜக.வில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். பாஜக.வில் சேர்வதற்கு முஸ்லிம் பெண்கள் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், எங்கள் பகுதியில் பழமைவாதிகளாக உள்ளவர்கள், தங்கள் குடும்ப பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பவில்லை. எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. பாஜக.வுக்கு பணியாற்ற கூடாது என்று மிரட்டுகின்றனர். கடந்த 8-ம் தேதி என் கணவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இவ்வாறு பர்ஹீன் கூறினார்.