Published : 12 Aug 2019 09:30 AM
Last Updated : 12 Aug 2019 09:30 AM

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்ரீத் கொண்டாட காஷ்மீரில் சிறப்பு ஏற்பாடு

ஸ்ரீநகர்

காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட மாநில அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம், 2 யூனி யன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது. இதன்காரணமாக காஷ்மீரில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

எனினும் பக்ரீத்தையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பக்ரீத்தை உற்சாகமாகக் கொண் டாட காஷ்மீர் அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது.

அதன்படி ஸ்ரீநகரில் உள்ள 6 முக்கிய சந்தைகள் நேற்று வழக்கம்போல செயல்பட்டன. அந்த சந்தைகளில் சுமார் 2.5 லட்சம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பள்ளத்தாக்கு பகுதிகளில் இறைச்சி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன.

ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல செயல்பட்டன. சமையல் காஸ் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டன. பள்ளத்தாக்கு முழுவதும் ரேஷன் கடைகள் நேற்று திறந்திருந்தன. அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநி யோகம் செய்யப்பட்டன. தகவல் தொடர்புக்காக பொது இடங் களில் 300 தொலைபேசி மையங் கள் அமைக்கப்பட்டன. 24 மணி நேர மின்சாரமும், குடிநீரும் விநி யோகமும் உறுதி செய்யப்பட்டது.

அரசு வட்டாரங்கள் கூறியபோது, “பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் திங்கள்கிழமை தொழுகை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மொபைல்போன் சேவை, இணைய சேவை விரைவில் செயல்படத் தொடங்கும். மத்திய அரசின் உத்தரவின்படி காஷ்மீர் நிர்வாகம் செயல்படவில்லை. சட்டம்-ஒழுங்கு, உள்ளூர் சூழ்நிலை, மக்களின் தேவைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்களே முடிவு எடுக்கின்றன” என்று தெரிவித்தன.

பக்ரீத் பண்டிகைக்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் களுக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங் கப்பட்டிருக்கிறது.

எனினும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா வரைக்கும் காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு நீடிக்கும். அதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் தங்கியிருப்பார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"கடந்த ஒரு வாரத்தில் ஒரு துப்பாக்கி குண்டுகூட சுடப்பட வில்லை. சிறு வன்முறை கூட நடைபெறவில்லை" என்று மாநில காவல் துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

பதற்றமான சில இடங்களில் மட்டும் பாதுகாப்பு கெடுபிடிகள் நீடிக்கின்றன என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x