Published : 11 Aug 2019 07:01 AM
Last Updated : 11 Aug 2019 07:01 AM

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது; கேரளாவில் கனமழைக்கு 57 பேர் உயிரிழப்பு: 1.2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு; 80 இடங்களில் நிலச்சரிவு; காவிரி அணைகள் நிரம்புகின்றன

திருவனந்தபுரம்

கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கன மழைக்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 1.2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு, மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான பேர் இறந்திருக்கலாம என அஞ்சப் படுகிறது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன், போலீஸார், தீயணைப்புப் படை யினர், ராணுவத்தினர், கடலோரக் காவல்படையினர், விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான நிவாரண முகாம் களை அமைத்து அங்கு பொதுமக் களுக்கு உணவு, உடைகள் வழங்கப் படுகின்றன. சுமார் 1.2 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மேலும் கடந்த 72 மணி நேரத்தில் 100 பேர் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக் கலாம் என அஞ்சப்படுகிறது.

சுமார் 35 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி யுள்ளனர். 80 இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதனி டையே கனமழைக்கு கேரளாவில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் 7 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களும் மழையால் பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து வெகுவாக தடை பட்டுள்ளது. பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

மழையால் மூடப்பட்டுள்ள கொச்சி விமான நிலையம் இன்று பிற்பகலுக்குப் பின்னர் திறக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதியைப் பார்வையிட்டு மக் களின் குறை கேட்க காங்கிரஸ் தலை வரும், தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று கேரளா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

47 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் பெய்து வரும் பலத்த மழைக்கு இந்த வாரத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தா ருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப் படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் அறிவித்துள்ளார். இதேபோல் குஜராத்தில் மழைக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் 24 பேர் மரணம்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து நேற்று செய்தி யாளர்களிடம் கர்நாடகா முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியதாவது:

கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத் துக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் பாதித்த மாவட்டங் களை விமானத்தில் இருந்தபடி சுற்றிப்பார்த்தேன்.

ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிக மான அளவில் சேதங்கள் ஏற்பட் டுள்ளன. இங்கு நிவாரணப் பணி களை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவியை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

1,024 கிராமங்கள் மழை, வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 2.4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 45 ஆண்டுகளில் முதன் முறையாக இதுபோன்ற பலத்த மழை, வெள்ளத்தை கர்நாடகா சந்திக்கிறது. கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்க வில்லை என்றாலும் அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது தொகுதி களில் பணியாற்றி வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் வழங்குவதற் காக பல்வேறு நிறுவனங்களும் அரசுக்கு உதவி வருகின்றன. இதன் படி, இன்போசிஸ் அறக்கட்டளை, ரூ.10 கோடியை மழை நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர் களுக்கு அரசு புதிய வீடுகளைக் கட்டித் தரும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

நிர்மலா சீதாராமன் ஆய்வு

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், நேற்று மழையால் பாதிக் கப்பட்ட பெலகாவி மாவட்டத் துக்குச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை துரிதமாகச் செய்யு மாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பெலகாவி, பிஜாப்பூர், சிக்கமக ளூர், தார்வாட், ஹூப்பள்ளி, பாகல் கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங் கள் மழையால் அதிகமாக பாதிக் கப்பட்டுள்ளன.

வேகமாக நிரம்பும் அணைகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரண மாக காவிரி நீர்ப்பாசன அணைக ளான கேஆர்எஸ், கபினி, ஹேமா வதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கர்நாடகாவில் உள்ள பெரிய அணைகளுள் ஒன்றான அல்மாட்டி அணையில் இருந்து விநாடிக்கு 5.3 லட்சம் கனஅடிக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் 519 மீட்டர் உயரமுள்ள இந்த அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

மழை வெள்ளத்தால் வீட்டில் சிக்கிக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.ஜனார்த்தன பூஜாரியை மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றனர். - பிடிஐ

நீலகிரி மாவட்ட நிவாரணப் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில், நேற்று சற்று மழை குறைந்த நிலையில், ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் நீலகிரி மாவட்டமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சற்று மழை குறைந்து காணப்பட்டதால், மீட்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அதிகாரிகளுடன், வெலிங்டன் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவு மழை பெய்த அவலாஞ்சி பகுதியில் துண்டிக்கப்பட்ட சாலையை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சீரமைத்தனர்.

அவலாஞ்சி மின் நிலையத்தில் உள்ள 60 ஊழியர்கள் மற்றும் மின்சார குடியிருப்பில் உள்ள 40 குடும்பங்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை 4 கி.மீ. தூரம் நடந்து சென்று விநியோகித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 75 பேரைக் கொண்ட 3 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவலாஞ்சி, பந்தலூர் பகுதிகளில் தலா ஒரு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் தயார் நிலையில் மற்றொரு குழு உள்ளது. அவலாஞ்சி பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நேற்று 11 பேர் மீட்கப்பட்டு, குந்தாவில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர். மேஜர் நீரஜ் உபாத்தய்யா தலைமையில் வெலிங்டன் ராணுவ மைய வீரர்கள் 60 பேர் எமரால்டில் உள்ள நிவாரண முகாமில், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதீத மழை காரணமாக, கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை அகற்றி, சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சேரங்கோடு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. சீபோர்த் எஸ்டேட் பகுதியில் மண்ணில் புதைந்தவரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

உதகை, குந்தா தாலுகாக்களில் மழை ஓய்ந்ததையடுத்து, தேயிலை மற்றும் விவசாயப் பணிகளுக்கு நேற்று தொழிலாளர்கள் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x