ஜம்மு காஷ்மீரில் கடைகள் திறப்பு: பக்ரீத் பண்டிகைக்கு தயாராகும் மக்கள்; அஜித் தோவல் உரையாடல்

ஜம்மு சந்தையில் பொருட்களை வாங்க குவிந்துள்ள மக்கள்
ஜம்மு சந்தையில் பொருட்களை வாங்க குவிந்துள்ள மக்கள்
Updated on
2 min read

ஜம்மு

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீரில் தடை உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப் பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பக்ரீத் பண்டி கையை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் 144 தடையுத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

மளிகை, மருந்து, காய்கறி கடைகள் திறந்துள்ளன. ஜம்மு சந்தையில் மக்கள் பொருட்களை வாங்க இன்று பெருமளவு குவிந்தனர்.

ஜம்முவில் பள்ளிகள் இன்று திறந்தன. மாணவ, மாணவிகள் பெருமளவு பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர். போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.

ஸ்ரீநகரில் பல இடங்களில் 144 தடை உத்தரவு விலகிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுத்தனர். இதனால் எடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.


இதனிடையே அனந்தநாக்கில் இன்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் உள்ளூர் மக்களுடன் உரையாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in