Published : 10 Aug 2019 11:11 AM
Last Updated : 10 Aug 2019 11:11 AM

ரஷ்யா செல்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார். அவருடன் உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, அசாம் மாநிலப் பிரதிநிதிகளும் செல்கின்றனர்.

மத்திய அரசு சார்பில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழு ஒன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்தோக் நகருக்குச் செல்கிறது.

இந்தப் பயணத்தின்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் உணவு பதப்படுத்துதல் தொழிற்கூடம் அமைப்பது, நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது மற்றும் எரிசக்தி துறைசார் தொழில்கூடங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

மேலும், விளாடிவோஸ்தக் நகரில் இந்திய - ரஷ்ய தொழில் முனைவோர் இடையே 6 வர்த்தகச் சந்திப்புகள் நடைபெறவுள்ளன.

அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் எதிரொலியாகவே ஆதித்யநாத் ரஷ்யா செல்கிறார். உ.பி. முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை உ.பி. அரசு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x