Published : 10 Aug 2019 08:28 AM
Last Updated : 10 Aug 2019 08:28 AM

இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதித்து உத்தரபிரதேசத்தில் பசு மாடுகளை பலியிட வேண்டாம்: முஸ்லிம்களுக்கு தியோபந்த் மதரஸா கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

இந்து சகோதரர்களின் உணர்வு களை மதித்து பசு மாடுகளை பலியிட வேண்டாம் என முஸ்லிம்களுக்கு உத்தரபிரதேசத்தின் தியோபந்த் மதரஸா வேண்டுகோள் விடுத் துள்ளது. திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

ஈத் உல் அஸா எனப்படும் பக்ரீத் பண்டிகை திங்கள்கிழமை நாடு முழுவதிலும் கொண்டா டப்படுகிறது. இதில், அல்லாவின் பெயரால் முஸ்லிம்கள் ஆடு, எருமை, ஒட்டகம் ஆகிய விலங்கு களை பலி கொடுப்பதை வழக்க மாக கொண்டிருக்கிறார்கள். இதன் இறைச்சியை மூன்று பங்காக்கி ஒன்றை ஏழை களுக்கும், மற்றொன்றை தம் உறவினர்களுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை உண்டு மகிழ்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பசுமாடு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இந்துக் கள் இதை புனிதமாகக் கருதுவ தால் அம்மாநில அரசுகள் பசுமாடுகளை வெட்டுவது தண் டனைக்குரியதாக சட்டம் இயற்றி யுள்ளன. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எந்த தடையும் இல்லை. இதனால், நாட்டின் பழமையான முக்கிய மதரஸாக் களில் ஒன்றான ஜாமியா ஷேக் உல் ஹிந்த் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பசு மாடுகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து உ.பி.யின் தியோபந்தில் அமைந்துள்ள இந்த மதரஸா ஷேக் உல் ஹிந்தின் மவுலானா முப்தி அசத் காஸ்மி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பக்ரீத் பண்டிகையில் இந்து சகோதரர்களின் மனது புண்படும் வகையில் எந்த விலங்குகளையும் பலியிடக் கூடாது. உதாரணமாக, அவர்கள் புனிதமாகக் கருதும் பசுக்களின் இறைச்சிக்கு தடை உள்ள மாநிலங்களில் அதை பலியிட வேண்டாம். இவற்றை முஸ்லிம்கள் பலியிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், எவருடைய மனதையும் புண் படுத்த முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை என இஸ்லாத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஆகஸ்ட் 15-ல் வரும் சுதந்திரதினத்தன்று மதர ஸாக்கள் அனைத்தும் நம் தேசியக்கொடி ஏற்றி, அங்கு தேசியகீதம் பாடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டங் களில் முஸ்லிம்களும், அதன் உலமாக்களும் செய்த தியாகங் களை நினைவுகூர வேண்டும் என்றும் மவுலானா முப்தி அசத் காஸ்மி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஆளும் உ.பி.யில் முதல் அமைச்சரான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது மதரஸாக்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண் டாடப்படவேண்டும் என அதில் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x