ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சிலர் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் சாலை வெறிச்சோடி கிடக்கிறது.படம்: பிடிஐ
காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சிலர் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் சாலை வெறிச்சோடி கிடக்கிறது.படம்: பிடிஐ
Updated on
2 min read

ஸ்ரீநகர்

பக்ரீத் பண்டிகையையொட்டி காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப் பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக காஷ் மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய் யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்ரீத் பண்டி கையை ஒட்டி காஷ்மீரில் நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 144 தடையுத்தரவு விலக்கி கொள் ளப்பட்டது. பொதுமக்கள் அமைதி யாக மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினர். மளிகை, மருந்து, காய்கறி கடைகள் திறந் திருந்தன. எனினும் மொபைல் போன், இணையசேவை சீராக வில்லை. தூர்தர்ஷன் உட்பட 3 சேனல்கள் மட்டும் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படு கின்றன.

காஷ்மீர் முழுவதும் நேற்று அமைதி நிலவியது. சோப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த 6-ம் தேதி முதல் நகரில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பாதுகாப்பு நிலவரம் குறித்து முக்கிய ஆலோ சனை நடத்தினார். பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பாது காப்பு ஏற்பாடுகளை செய்வது குறித் தும் இருவரும் ஆலோசித்தனர்.

ஸ்ரீநகர் சிறையில் இருந்து நேற்று முன்தினம் 25 கைதிகள் உத்தர பிரதேசம் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டனர். இதேபோல நேற்று மேலும் 20 கைதிகள் ஸ்ரீநக ரில் இருந்து ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டனர். விமானப்படை விமானம் மூலம் பலத்த பாதுகாப் புடன் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

யெச்சூரி, டி.ராஜா தடுத்து நிறுத்தம்

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் நேற்று விமானம் மூலம் நகருக்கு சென்றனர். ஆனால் அவர்கள் விமான நிலை யத்திலேயே தடுத்து நிறுத்தப் பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப் பப்பட்டனர்.

இதுகுறித்து சீதாராம் யெச்சூரி கூறியபோது, " பாதுகாப்பு நிலவரம் காரணமாக ஸ்ரீநகருக்கு நுழைய யாருக்கும் அனுமதியில்லை என்று பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்தியா கண்டிப்பு

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலன் கருதி மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பதற்றமடைந்துள்ளது. காஷ்மீர் வளர்ச்சி அடைந்தால் மக்களை ஏமாற்ற முடியாது என்று பாகிஸ் தான் அஞ்சுகிறது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்திருப்பது ஒருதலைப்பட்ச மான நடவடிக்கை. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரகரீதியான உதவி கள் கிடைப்பது தொடர்பாக பாகிஸ்தானுடன் தொடர்ந்து தொடர் பில் உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in