

வயநாடு
கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் வயநாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் விழுந்த வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் பெய்து வருகிறது.
குறிப்பாக கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்கள், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கேரளாவின் வட மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு போன்றவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.
நிலச்சரிவால் தேயிலை தோட்டங்கள் மண் மூடியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.