Published : 08 Aug 2019 10:19 PM
Last Updated : 08 Aug 2019 10:19 PM

370-ம் சட்டப்பிரிவு குறித்த முடிவு ஜம்மு காஷ்மீர், லடாக்கை மட்டுமல்ல  நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தும்: பிரதமர் மோடி உரை

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார், அதில் வளர்ச்சி, தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றைப் பிரதானப்படுத்திப் பேசினார் முதல்வர்.

பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

“வரலாற்று முடிவு”

வரலாற்று முடிவையடுத்து லடாக்கிற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் ஒரு புதிய தொடக்கமாகும் இது. ஜம்மு காஷ்மீர், லடாக் வளர்ச்சி ஏற்படவில்லை, அது அம்மக்களின் உரிமை. கட்சிகள் மக்களின் வளர்ச்சிக்காக உழைக்கிறது, சட்டங்கள் மிகவும் கடுமையான பரிசீலனைகளுக்குப் பிறகே கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தாமல் அதனை சுரண்டல் ஆயுதமாக்கினால் அது தவறு.

இந்தியாவின் பிறபகுதிகளில் குழந்தைகளுக்கு கல்வியுரிமை உள்ளது, ஆனால் ஜம்மு காஷ்மீர் குழந்தைகளுக்கு இல்லை. பிற மாநிலங்களில் வறுமைக்கு எதிரான உரிமைகள் இருக்கின்றன, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இல்லை. பிற மாநிலங்களில் எஸ்.சி/எஸ்.டி மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது, தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள்.. ஜம்மு காஷ்மீரில் இல்லை.

காஷ்மீரில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை. அமைதி நிலவுகிறது.

‘அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்’

சகோதர, சகோதரிகளே, 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு ஹெ.ஆர்.ஏ., எல்.டி.ஏ. உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும். ஜம்மு காஷ்மீரில் அனைத்து பணிக்காலியிடங்களும் இனி நிரப்பப்படும். புதிய அமைப்பின் படி ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கிடைக்கும் அதே பயன்கள் கிட்டும். ஏனெனில் சில காலங்களுக்கு மத்திய அரசின் கீழ் ஜம்மு காஷ்மீர் இருக்கும் என்பதால் வளர்ச்சி உடனடியாக அங்கு ஏற்படும். ஜம்மு காஷ்மீரில் அனைத்து ஸ்தாபனங்களும் இயங்கும், ரயில், சாலை இணைப்புகள் மேம்படுத்தப்படும்.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தில் புதிய பணிக் கலாச்சாரம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உருவாக்க முயற்சி செய்தோம். இதன் பலன் தான் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், அனைத்து வேளாண் பயிர் திட்டங்கள், மின்சாரத் திட்டங்களானாலும் சரி, ஊழல் எதிர்ப்புக் கழகமாயினும் சரி இதன் பணிகள் அதிகரிக்கப்படும்.

‘ஜம்மு காஷ்மீர் இளைஞர்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்’

வரும் காலங்களில் ஜம்மு -காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். புதிய அரசு உருவாக விரும்புகிறோம், முதல்வர் வரட்டும். நீங்கள் மிகவும் நாணயமானவர்கள் என்பதை உறுதிபட கூறுகிறேன். வெளிப்படையான ஒரு சூழலில் உங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் ஏற்படும்.
பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உங்கள் சொந்தபந்தங்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும் ஆனால் அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்களிக்க முடியாது இருந்ததை நீங்கள் அறியும் போது அதிர்ச்சியடைவீர்கள். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள். அநீதி இப்படியே போய்க்கொண்டிருக்கலாமா?

புத்துயிர்பெற்ற புதிய சூழ்நிலையில் காஷ்மீர் மக்கள் இனி புத்துயிர் பெற்ற உத்வேகத்துடன் தங்கள் இலக்குகளை சாதிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பிறகு புதிய அமைப்பின் கீழ் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பணியாற்றும் போது அவர்களால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும். ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினை வாதச் சக்திகளிடமிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பல பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியினால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. இனி இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு பெற்று ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வார்கள். சகோதர, சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் மண்ணின் வளர்ச்சியை தாங்களே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘காஷ்மீர் பொருட்கள் உலகம் முழுதும் பரவ வேண்டும்’

காவி நிறம் அல்லது ஜம்மு காஷ்மீரின் காபியின் ருசி, ஆப்பிள் பழத்தின் இனிப்பாக இருக்கட்டும், அல்லது ஆப்ரிகாட் பழங்களின் சாறாகட்டும், காஷ்மீரி ஷால்களாகட்டும், அல்லது கைவினைப் பொருட்களாகட்டும் லடாக்கின் இயற்கைப்பொருளாகட்டும் அல்லது மூலிகை மருந்தாகட்டும் இவை அனைத்தும் உலகம் முழுதும் பிரசித்தி பெற வேண்டும்.

யூனியன் பிரதேசமாக லடாக் மாறிய பிறகு அந்த மக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு சிறப்புப் பொறுப்பேற்றுக் கொள்கிறது. இனி மத்திய அரசு அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாகச் செயல்படுத்தும்.

ஆன்மீக சுற்றுலாத்தலமாக லடாக் மாற மிகப்பெரிய ஆற்றல் அதனிடம் உள்ளது. சூரிய ஒளி உற்பத்தியின் மையமாக லடாக் பிரதேசம் ஆகும். பாகுபாடற்ற வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஆனால் அவர்கள் தேசிய நலன்களுக்கு இம்மக்கள் பிரதான முன்னுரிமை அளித்து ஜம்மு காஷ்மீர் லடாக் வளர்ச்சிக்கு புதிய வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். லடாக் அனைத்து விதமான உள்கட்டமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகளையும் பெறும்.

‘அமைதியான ஈத் பண்டிகைக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்’

ஜம்மு காஷ்மீர், லடாக் குறித்த இந்த முடிவுகளின் மீது இருவேறு கருத்துகள் இருக்கலாம் அது ஜனநாயகத்தின் இயற்கை. நான் கருத்து வேற்பாடுகளையும் ஆட்சேபணைகளையும் மதிக்கிறேன். இது குறித்த விவாதத்தில் மத்திய அரசு பதிலளித்தது. இது நமது ஜனநாயகப் பொறுப்புடைமையாகும். ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் நம்மைப் பற்றி கவலைப்படுகின்றனர், அவர்களது மகிழ்ச்சி, துயரம், அவர்களது வாதை நம்மிடமிருந்து அன்னியமானதல்ல. சட்டப்பிரிவு 370லிருந்து விடுதலை என்பது உண்மை. இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இங்குள்ள மக்கள் ஏற்கெனவே எதிர்கொண்டதை முன்னிட்டுத்தான். சிலர் இங்கு சூழ்நிலைகளை கெடுக்க நினைக்கின்றனர். உள்ளூர் மக்கள் அவர்களுக்கு வினையாற்றுகிறார்கள். ஆனால் தேசப்பற்றுள்ள ஜம்மு காஷ்மீர்கள் பலர் பாகிஸ்தானின் சதிகளுக்கு எதிராக திரண்டு நின்றுள்ளனர். மெதுவாக சூழல் இங்கு சகஜ நிலைக்குத் திரும்பும் பிரச்சினைகளும் முடியும் என்பதை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதிபடக் கூறுகிறேன்.

ஈத் முபாரக் பண்டிகை நெருங்குகிறது. உங்கள் அனைவருக்கும் என் ஈத் முபாரக் வாழ்த்துக்கள். ஜம்மு காஷ்மீரில் மக்கள் அமைதியாக ஈத் பண்டிகையைக் கொண்டாட அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். ஜம்மு காஷ்மீருக்கு வெளியே வசிப்பவர்கள் ஈத் பண்டிகைக்காக காஷ்மீர் திரும்ப விரும்புகிறார்கள், இவர்களுக்கும் அரசு உரிய உதவிகளைச் செய்யும்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள், போலீஸார், மாநில அரசு ஊழியர்கள் நிலைமைகளை பாராட்டும் விதமாகக் கையாள்கிறார்கள். இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். இங்கு மட்டுமல்ல இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.

உலகின் இப்பகுதியில் அமைதியும் வளமும் கூடிவருமாயின் உலக அமைதிக்கான நம் முயற்சிகளும் வலுவடையும். ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதி மக்கள் எவ்வளவு வலுவானவர்கள், எவ்வளவு தைரியமானவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து புதிய இந்தியாவுடன் புதிய ஜம்மு காஷ்மீர், புதிய லடாக்கை கட்டமைப்போம். நன்றி.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x