Published : 08 Aug 2019 06:50 PM
Last Updated : 08 Aug 2019 06:50 PM

நிலத்தகராறில் 10 பேர் கொல்லப்பட்ட உ.பி.யின் சோன்பத்ரா கிராமத்தில் பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள்

கடந்த மாதம் நிலத்தகராறினால் ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உ.பி. சோன்பத்ரா கிராமத்தில் 10 பேர் கொல்லப்பட்டு 24 பேர் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமக் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

உம்பா கிராமத்தில் ஒரு முதன்மை பள்ளி கூட இல்லாததால் மூர்த்தியா கிராமத்திற்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கல்விக்காக அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த படுகொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரான யக்யா தத் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.

உம்பா கிராமத்தைச் சேர்ந்த அனுராக், லால் சாஹிப், சவிதா ஆகிய மாணவர்கள் மூர்த்தியா கிராமத்தைச் சேர்ந்த சிலர் அந்த கிராம பள்ளிக்கு வரக்கூடாது என்று தங்களை அச்சுறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் கிரமமான உம்பாவில் ஒரு மேநிலை ஆரம்பப் பள்ளி வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் கல்வி அதிகாரி உதய் சந்த்ரா ராய் கூறும்போது, “இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால் போலீஸார் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் கண்டிப்பான நடவடிக்கைஅக்ளினால் தற்போது மாணவர் வருகை 50% அதிகரித்துள்ளது. நாங்களும் வருகையை அதிகரிக்க எங்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம்” என்றார்.

சோன்பத்ராவில் நடந்த அந்த பயங்கர வன்முறையில் கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தச் சம்பவம் தொடர்பாக 28 பேர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. ஆதர்ஷ் கிரிஷி சாகரி சமிதியின் முதன்மை உறுப்பினர்கள் 12 பேர் மீது கிராம சபை நிலத்தை அபகரித்தற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த விவகாரமும் சிறப்பு விசாரணைக்குழுவினரால் விசாரிக்கப்படும். இது தொடர்பாக 8 உயரதிகாரிகள் மீடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட மேஜிச்ட்ரேட், போலீஸ் உயரதிகாரி, கூடுதல் எஸ்பி, மூன்ரு சர்க்கிள் ஆபீசர்கள், ரெவின்யூ ஏ.ஆர்.ஓ, கெஜட் அதிகாரிகளல்லாத 7 பேர் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

-ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x