Published : 08 Aug 2019 02:55 PM
Last Updated : 08 Aug 2019 02:55 PM

‘‘நல்லுறவு பாதிக்கும்’’ - பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

புதுடெல்லி

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இருதரப்பு நல்லுறவுகளை பாதிக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டம் புதனன்று ஆக.7 பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில், ‘‘தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நேற்று அறிவித்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை சார்பில் தெரவிக்கையில் ‘‘ ஜம்மு-காஷ்மீரில் நலனுக்காக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், பாகிஸ்தானில் எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் பாகிஸ்தானின் வாதங்கள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தவே பயன்படுகிறது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் விஷயத்தில் பாகிஸ்தான் எடுக்கும் ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தும். ளை எடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக நாங்கள் எதிர்பார்த்தோம் இதில் நமது தூதரக உறவுகள் ரத்து செய்யப்படுவதும் அடங்கும்.

370 வது பிரிவு தொடர்பான நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் இறையாண்மை பாதுகாப்பது அரசியல் சட்டத்தின் பணி. உள் விவகாரங்களில் தலையிடுவதன் மூலம் அதிகார வரம்பில் தலையிட முற்படுவதாக அமையும். பாகிஸ்தானின் இதுபோன்ற நடவடிக்கை ஒருபோதும் வெற்றிபெறாது. இதுபோன்ற நடவடிக்கைகள் இருநாட்டு நல்லுறவை பாதிக்கும்.இதனை திரும்ப பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x