காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை திருப்தி: ஆளுநர் சத்யபால் மாலிக் ஆய்வு

காஷ்மீரில் வன்முறை சம்பவம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்வதற்காக ஜம்மு ரயில் நிலையத்தில் நேற்று கூடியிருந்த பொதுமக்கள்.படம்: பிடிஐ
காஷ்மீரில் வன்முறை சம்பவம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்வதற்காக ஜம்மு ரயில் நிலையத்தில் நேற்று கூடியிருந்த பொதுமக்கள்.படம்: பிடிஐ
Updated on
1 min read

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று ஆய்வு செய்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370, 35ஏ சட்டபிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து 2 யூனியன் பிரதேசமாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பிரச் சினை ஏற்படாதவாறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் காஷ்மீர் அரசியல் தலைவர்களும், பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட் டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று ஆளுநர் மாளிகையில் ஆய்வு நடத் தினர். கூட்டத்துக்குப் பின்னர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநரின் செய் தித்தொடர்பாளர் கூறும்போது, “மாநிலத்தில் உள்ள மருத்துவ மனைகளில் அவசர சேவைகள் திருப்திகரமான முறையில் நடை பெற்று வருகின்றன. மேலும் மார்க்கெட்களில் பொருட்களை மக்கள் வாங்குவதற்கும் பிரச்சினை இல்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அதிகாரிகளை அனுப்பி நிலைமை குறித்து அறிக்கை தருமாறு ஆட்சியர்க ளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக எடுக் கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் ஆலோசகர்கள் கே.விஜயகுமார், கே.ஸ்கந்தன், பரூக் கான், தலைமைச் செயலர் பிவிஆர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in