17 ஆண்டுகளில் சிறப்பான மாநிலங்களவை கூட்டத் தொடர்: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

மாநிலங்களவை ஒத்திவைக்கப்படும் முன் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு :படம் ஏஎன்ஐ
மாநிலங்களவை ஒத்திவைக்கப்படும் முன் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு :படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

புதுடெல்லி,

கடந்த 17 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இந்த முறை நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகவும் ஆக்கப்பூர்வமானது, 32 மசோதாக்கள நிறைவேற்றப்பட்டன என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் ஜுன் 17-ம் தேதி தொடங்கி, ஜூலை 27-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டி இருப்பதால், கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்று கூட்டத் தொடர் முடிந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தை முடித்து வைக்கும்முன் மாநிலங்களவையில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு பேசியதாவது:

“கடந்த 17 ஆண்டுகளில் இந்த ஆண்டு நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகுந்த ஆக்கப்பூர்வமானதாக அமைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக, சிறப்பாக அமைந்திருக்கிறது. 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தை சிறப்பாக முடிக்க துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுமையாக கவனித்து வருகிறார்கள், அதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டீர்கள்.

இந்த கூட்டத்தொடரில் மிகமுக்கியமான முத்தலாக் தடை சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை சமூக பொருளாதாரத்தில் நன்கு எதிரொலிக்கும்.

புள்ளிவிவரங்கள்படி, கடந்த 1978-ம் ஆண்டில் இருந்து 41 ஆண்டுகளில் 1984-ம் ஆண்டு நடந்த 131 கூட்டத்தொடரில் மட்டும்தான் 37 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன இதுதான் அதிகபட்சம். அதன்பின் 2002-ம் ஆண்டில் 197-வது கூட்டத்தில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 41 ஆண்டுகளில் இந்த ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர 5-வது சிறந்த கூட்டத்தொடராகும். ஆனால், கடந்த 5 கூட்டத்தொடர்களில் மொத்தமே 33 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த கூட்டத்தொடரில் நேரத்தை 104 சதவீதம் சிறப்பாக பயன்படுத்தியுள்ளோம்.

ஏறக்குறைய 17அமர்வுகளுக்கு பின் இது நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவையில் குறைந்தபட்சமாக வேலைத்திறன் 7.44 சதவீதமாகவும், அதிகபட்சமாக 65.60 ஆகவும் இருந்தது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபின் கடந்த 2 நாட்களில் எந்தவிதமான மசோதாவும் நிறைவேற்றப்படாமல் இடையூறு இருந்தது. இதனால் அவையின் 19 மணிநேரம் 12 நிமிடங்கள் என மதிப்புமிக்க நேரம் வீணானது. ஒட்டுமொத்தமாக 88 அமர்வுகளில் 173 மணிநேரம் 33 நிமிடங்கள் அவை செயல்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் அதாவது 2005-ம் ஆண்டுக்குப்பின், அதிபகபட்சமாக 35 அமர்வுகள் நடந்துள்ளன. 204 கூட்டத்தில் 38 அமர்வுகள் நடந்திருந்தன. நீண்ட கூட்டத்தொடராக கடந்த 1952-ம் ஆண்டுக்குப்பின், 1955-ம் ஆம்டில் 50 அமர்வுகள் நடந்தன.

இந்த கூட்டத்தொடரில் 151 நட்சத்திர குறியீடு கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் 45 அமர்வுகளுக்குப்பின் இதுதான் அதிகமாகும்.

கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேள்வி நேரத்துக்கு பின் 326 துணைக் கேள்விகள் கேட்கப்பட்டன”.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in