

ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதியமைச்சர் கிர்தாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழா ஜம்முவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விமானம் மூலம் ஜம்மு விமானநிலையம் வந்தடைந்தார்.
அவரை மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் முப்தி முகமது சையத், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் வருகையை ஒட்டி ஜம்முவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் ஜொராவர் அரங்கத்தைச் சுற்றி பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின்பொது ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.70,000 மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அறிவிக்கயிருப்பதால் இந்த விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் இன்று பிற்பகலே டெல்லி திரும்புகிறார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதியமைச்சர் கிர்தாரி லால் டோக்ராவின் மகளைத்தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மணந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.