

கொல்கத்தா
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் எனப் போராடி உயிர் நீத்தவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக விளங்கிய ஷியாமா பிரசாத் முகர்ஜி. சிறப்பு அந்தஸ்து தரக்கூடாது என அப்போதைய பிரதமர் நேருவிடம் வாக்குவாதம் செய்து கட்சியிலிருந்து வெளி யேறினார் ஷியாமா பிரசாத் முகர்ஜி. இவர் நேரு அமைச் சரவையில் அங்கம் வகித்தவர்.
பின்னர் பாரதீய ஜனசங் கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார் ஷியாமா பிரசாத் முகர்ஜி. இந்த ஜனசங்கம் தான் பின்னாளில் பாஜகவாக உருமாறியது.
இந்நிலையில் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உறவினரான ஓய்வு பெற்ற நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி நேற்று கூறும்போது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்காகத்தான் எனது மாமா ஷியாமா பிரசாத் முகர்ஜி போராடினார். இந்தச் சட்டமானது மக்களிடையே விரோதத்தை ஊக்குவித்து வந்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதால் தான் அங்கு அதிக அளவில் தீவிர வாதமும், பிரிவினைவாதமும் தோன்றியது.
இந்த 370-வது பிரிவானது தற்காலிகமான அம்சம்தான். இது அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது. ஆனால் இது நிரந்தரமான சட்டமாக இல்லை. இந்த 370-வது பிரிவை நீக்கியதால் அரசமைப்புச் சட்ட விதிகளை யாரும் மீறவில்லை. அது வேண்டுமானால் நாட்டின் முதல் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை மீறியதாக இருக்க லாமே தவிர வேறு மீறல்கள் இல்லை” என்றார். - பிடிஐ