ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி; லடாக் பகுதி மீதான நிலைப்பாட்டை மாற்றும் சீனா: வெளிநாடுகளில் போராட்டம் நடத்தும் பாகிஸ்தான் கட்சிகள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நேற்று முன்தினம் நீக்கியது. அதை வரவேற்று, பாஜக தொண்டர்கள் மும்பையில் நேற்று ஆடல், பாடலுடன் கொண்டாடினர். படம்: விவேக் பிந்த்ரே
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நேற்று முன்தினம் நீக்கியது. அதை வரவேற்று, பாஜக தொண்டர்கள் மும்பையில் நேற்று ஆடல், பாடலுடன் கொண்டாடினர். படம்: விவேக் பிந்த்ரே
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரின் எல்லைகள், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வித்தியாசமாக மூன்று நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின் றன. அவை, பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். இதனால், பாகிஸ்தானை போல சீனாவும் ஜம்மு-காஷ்மீரை ஆதார மாக்கி பிரச்சினை செய்ய ஆயத்த மாகிறது.

காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலானது என சீனா இது வரையில் கூறி வந்தது. ஆனால், சீனாவின் பழம்பெரும் நாளிதழான ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ ஆகஸ்ட் 1 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதில், காஷ்மீரின் லடாக்கின் ஒரு பகுதி சீனாவுக்கு சொந்தமானது எனக் கூறி உள்ளது. புத்த மதத் தினர் பெருமளவில் வசிக்கும் லடாக் பகுதியை சீனர்கள் ‘சிறிய திபெத்’ என அழைப்பதாகவும் அக்கட் டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல முதன்முறையாக இந்தத் தகவலை அக்கட்டுரையின் மூலம் சீன அரசே வெளிப்படுத்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதன் பின்னணியில், காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்படலாம் என அந்நாட்டின் உளவுத்துறை முன்கூட்டியே சந்தே கித்திருக்கலாம் எனக் கூறப்படு கிறது.

ஹாங்காங்கை தலைமையிட மாகக் கொண்டு 1903-ம் ஆண்டு முதல் வெளியாகும் இந்நாளிதழ், அந்நாட்டின் இணையதள வியா பாரப் பெருநிறுவனமான அலிபாபா குழுமத்துக்கு சொந்தமானது.

இதுகுறித்து மத்திய உளவுத் துறை வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “லடாக்கை வைத்து சீனா இந்தியா வுடன் பிரச்சினை செய்ய திட்டமிடு வதாகத் தகவல்கள் கிடைத்துள் ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா வுக்கு இடையே பொருளாதார வழித் தடப்பணி கட்டமைக்கப்பட்டு வரு கிறது. இதற்காக பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீரில் பணியாற்றி வந்த 60 பொறியாளர்களை சீனா கடந்த வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றுள்ளது” என்றனர்.

இந்நிலையில், வரும் செப்டம் பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடு கள் சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் பாக அந்நாட்டு அரசின் ஆளும் கட்சியான தெஹ்ரீக்-எ-இன்ஸாப், லண்டன், பிரசெல்ஸ் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடு களின் தலைநகரங்களிலும் போராட் டம் நடத்த தங்கள் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் முஸ்லிம்கள் மீது, இந்திய இந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் பொய்யான செய்திகள் பரவுகின்றன. இதை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் அந்நாட்டு அரசு தனது உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) மூலம் பரப்பி வருகிறது.

இதுபோன்ற காரணங்களால், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை காஷ்மீரில் அதிகரிக்கும் என மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in