மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியது: உயிரைக் கொடுக்கவும் தயார் என அமித் ஷா ஆவேசம்; காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சால் சோனியா அதிர்ச்சி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி. படம்: பிடிஐ
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி. படம்: பிடிஐ
Updated on
3 min read

புதுடெல்லி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்
களவையைத் தொடர்ந்து மக் களவையிலும் நேற்று நிறைவேறி யது. விவாதத்தின்போது, காஷ் மீருக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக தெரி வித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பான தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் ‘ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா’ மாநிலங் களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த தீர்மானம் மற்றும் மசோதாவை மக்களவை யில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதன் மீது
நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, “1994-ல் மக்களவை
யில் தாக்கல் செய்த ஒரு தீர்மானத் தில் காஷ்மீரின் முழு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி நீங்கள் (அமித் ஷா) இப்போது கவலைப்படுவதாக தெரியவில்லை. அனைத்து விதி
களையும் மீறி ஒரே இரவில் காஷ் மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் போவதாகக் கூறுகிறீர்கள்” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகை யில் அமித் ஷா பேசும்போது, “ஜம்மு காஷ்மீரின் முழு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கமுடியாத பகுதிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, “எனக்கு ஒரு சந்தேகம். இது உள் விவகாரம் என கூறுகிறீர்கள். ஒரு மாநிலத்தை பிரிக்க முடிவு செய்துள்ளீர்கள். 1948 முதல் காஷ்மீரை ஐ.நா. சபை கண்காணித்து வருகிறது. இது உள்நாட்டு விவகாரமா? சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் உடன்படிக்கையில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். இது உள்நாட்டு விவகாரமா அல்லது இருதரப்பு விவகாரமா? காஷ்மீர் இருதரப்பு விவகாரம் என்றும் இதில் தலையிட வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் கூறியுள்ளார். இதற்குப் பிறகும் இது உள்நாட்டு விவகாரமா என அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

சோனியா, ராகுல் அதிர்ச்சி

காஷ்மீர் உள்நாட்டு விவகாரமா இருதரப்பு விவகாரமா என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பிய போது, அவரது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்தி தனக்குப் பின்னால் அமர்ந் திருந்த ராகுல் காந்தியை அதிர்ச்சி யுடன் பார்த்தார். ராகுலும் சவுத் ரியை லேசாக திரும்பிப் பார்த்தார். அப்போது பாஜக உறுப்பினர்கள் ‘அவமானம் அவமானம்’ என கோஷம் எழுப்பினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட சவுத்ரி பேசும்போது, “நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இது அடிப்படையான கேள்வி. தயவு
செய்து தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இதற்கான பதிலை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்றார். அப்போது சோனியா காந்தி தர்மசங்கடத்துக்கு உள் ளானார்.

பின்னர் அமித் ஷா பேசும்போது, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என நீங்கள் கருத வில்லையா? என்ன சொல்கிறீர்
கள்? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். ஜம்மு காஷ்மீர் என்ற சொன்னாலே அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள அக்சய் சின் ஆகிய பகுதிகளும் அடங்கிவிடும். இதற்காக என் உயிரைக் கொடுக்
கவும் தயார்” என்றார்.

இந்த விவாதத்தின்போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சம்பந்தப் பட்ட மாநில கட்சிகளுடன் முன்
கூட்டியே ஆலோசனை நடத்தாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. குறிப்பாக, இது தொடர் பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாமல் இந்த முடிவு எடுத்திருப்பது தவறு என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மாநில அந்தஸ்துஇறுதியாக விவாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அமித் ஷா பேசும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு காரண மாக, காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம்தானா என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருந்து வந்தது.
அதேநேரம் இதன் நோக்கமும் நிறை வேறவில்லை. மாறாக, தீவிரவாத செயல்கள் அதிகரித்து வந்தன. 1989 முதல் இதுவரை 41,500-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதத்துக்கு உயிரிழந்துள்ளனர். இந்தப் பிரிவு காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு சுவர் போல இருந்து வந்தது. இப்போது அந்த சுவர் உடைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஹுரியத் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இல்லை. ஆனால் பொதுமக்களுடன் பேச தயாராக உள்ளோம். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியதும் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதேபோல, பாகிஸ்தான் ஆக்
கிரமிப்பு காஷ்மீருக்கு இந்தியா தொடர்ந்து சொந்தம் கொண்டாடும்” என்றார்.

விவாதம் முடிவடைந்த பிறகு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆதரவாக 351 வாக்குகளும் எதிராக 72 வாக்குகளும் பதிவானது.

இதையடுத்து, காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மீதான
வாக்கெடுப்பில், ஆதரவாக 370 வாக்குகளும் எதிராக 70 வாக்குகளும் பதிவானது.

இதையடுத்து, இந்தத் தீர் மானமும் மசோதாவும் நிறை வேறியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, பொருளா தாரத்தில் நலிந்த பொதுப் பிரி வினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (2வது திருத்த) மசோதாவை திரும்பப் பெறுவதாக அமித் ஷா அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறி விட்டதால், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என அமித் ஷா தெரிவித்தார். இந்த மசோதா மாநிலங்களவையிலும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதாவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதால், ஏற்கெனவே இயற்றப் பட்ட சட்டங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்பது குறிப் பிடத்தக்கது.

இதையடுத்து மக்களவை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

புதிய விடியல் காத்திருக்கிறது: மோடி

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நாம் ஒன்றாக இருப்போம். ஒன்றாக எழுவோம். ஒன்றாக சேர்ந்து 130 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்குவோம். ஜம்மு-காஷ்மீர் தொடர்பான வரலாற்றுச்சிறப்புமிக்க மசோதாக்கள் பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்மூலம் காஷ்மீரின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். உள்கட்டமைப்பு மேம்படும். வளர்ச்சி வேகமெடுக்கும். காஷ்மீர் இளைஞர்கள் சமுதாய நீரோட்டத்தில் இணைவார்கள். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத, தீவினை எண்ணம் கொண்ட குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரை ஆட்டிப் படைத்து வந்தனர். அவர்களிடமிருந்து காஷ்மீர் விடுதலை பெற்றிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி சகோதர, சகோதரிகளின் துணிச்சலுக்கும் பொறுமைக்கும் மரியாதை செலுத்துகிறேன். காஷ்மீருக்கு ஒரு புதிய விடியல், ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in