

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்ட சிறையில் நேற்று விசாரணைக் கைதி ஒருவர் சிறைக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 6 போலீஸார் உள்பட 26 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஜான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரத்சிங் நேற்று கூறும்போது, “சனிக்கிழமை மாலை சிறை பெண் காவலர் ஒரு வரை ஷ்யாம் குமார் யாதவ் என்ற விசாரணைக் கைதி மிரட்டி அச்சுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சிறைக் காவலர்கள் ஷ்யாம் குமாரை தாக்கினர். இதில் காயமடைந்த ஷ்யாம் குமார் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த சக கைதிகள், சிறைக் காவலர்களை கல்வீசித் தாக்கினர்.இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 6 போலீஸார் உட்பட 26 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.