Published : 06 Aug 2019 12:19 PM
Last Updated : 06 Aug 2019 12:19 PM

சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பின் எப்படி இருக்கிறது ஜம்மு - காஷ்மீர்?- என்ன சொல்கிறார்கள் மக்கள்?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக நேற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியனவற்றை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் கண்காணிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரின் இயல்புநிலையில் எந்த பாதிப்பும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு உயரதிகாரிகள் வட்டம் இது குறித்து கூறும்போது, "சட்டப்பிரிவு 370 மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக காஷ்மீர் எப்போதுமே யூனியன் பிரதேசமாகவே இருந்துவிடாது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஏற்ப மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை உள்ளூர்வாசிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஸ்ரீநகர்வாசிகள் அரசின் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சில பகுதிகளில் மட்டும் பாதுகாப்புப் படை குவிப்பு காரணமாக மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், படை குவிப்பால் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிகை என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x