கர்நாடகாவில் ஒரே நாளில் 5 விவசாயிகள் தூக்கிட்டு தற்கொலை: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

கர்நாடகாவில் ஒரே நாளில் 5 விவசாயிகள் தூக்கிட்டு தற்கொலை: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
Updated on
2 min read

கர்நாடகத்தில் விவசாயிகள் தற் கொலை அதிகரித்து வரும் நிலை யில் நேற்று ஒரேநாளில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன. மண்டியா மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் சர்க்கரை ஆலை கள் நிலுவை தொகையை வழங் காததால் 30-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தற்கொலை செய்துள்ள னர். இதை கண்டித்து எதிர்க்கட்சி களும் விவசாய சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற‌னர். விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, விவசாயிகள் தற்கொலை குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு நேற்றுமுன் தினம் கடிதம் எழுதியுள்ளார்.

ஒரே நாளில் 5 பேர் தற்கொலை

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் தற்கொலை செய் துள்ளனர். தும்கூர் மாவட்டத்தில் உள்ள நந்தினஹள்ளி கிராமத்தை சேர்ந்த அல்லப்பா (55) என்கிற விவசாயிக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக அருகில் உள்ள தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தாததால் வங்கி நிர்வாகம் நிலத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இத னால் விரக்தி அடைந்த விவசாயி அல்லப்பா தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தும்கூர் மாவட்டம் கொனமதேன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி (31). இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் பாக்கு பயிரிடு வதற்காக வங்கியில் ரூ. 2.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இது தவிர, அக்கம்பக்கத்தில் விவசாய செல வுக்காக ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். விவசாயத் தில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் கடன் தொல்லையின் காரணமாக நேற்று அருகில் உள்ள அரசு பள்ளியில் தற்கொலை செய்து கொண்டார்.

மண்டியா மாவட்டத்தை சேர்ந்த வர் உச்சே கவுடா(36), துமகூருவில் குமாரசாமி(42), குல்பர்கா மாவட்டத்தில் மாணிக்க ரெட்டி(51) உள்ளிட்டோரும் தற்கொலை செய்து கொண்டனர்.

தேவகவுடா குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமரும் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சியின் தலை வருமான தேவகவுடா நேற்று கூறியதாவது:

விவசாயிகளின் நலனில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் துளியும் அக்கறை இல்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் தற்கொலையை தடுத்து நிறுத்தாவிடில், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக‌ மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் சித்தராமையா நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை யில் ஈடுபட்டார்.மேலும் தற் கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை இன்று சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in