

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், திருமண நிகழ்ச்சியின் போது மணமகளைச் சுட்டுக் கொன்ற உறவுக்கார இளைஞர் தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மணப்பெண் தன்னை காத லித்து ஏமாற்றியதால்தான் அவ ரைக் கொன்றதாக தெரிவித்துள் ளார்,
போபால் லால்காட்டி பகுதியில் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்து. திருமணச் சடங்குகளுக்கு முன்னதாக, மணமகன் ரோஹித் நாம்தேவுடன், மணப்பெண் ஜெய்ஸ்ரீ நாம்தேவ்(29) நின்றபடி உறவினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு மிக அருகில் வந்த உறவுக்கார இளைஞரான அனுராக், திடீரென துப்பாக்கியை எடுத்து மணமகளின் கழுத்தில் சுட்டார். பின்னர் தன்னையும் சுட்டுக் கொல்ல முயன்றார். ஆனால், அந்த குண்டு அவர் மீது படாமல் வேறொருவர் மீது உரசிச் சென்றது.
அங்கிருந்தவர்கள் அனுராக்கைப் பிடித்து அடித்து, உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஜெய்ஸ்ரீ நாம்தேவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
அனுராக் பற்றி என்ன சொல்வது எனத் தெரியவில்லை என்று, அவரது உறவினர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். மணப்பெண் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என போலீஸாரிடம் அனுராக் தெரிவித்துள்ளார்.
திருமணம் வெள்ளிக்கிழமை காலை நிகழ்வதாக இருந்தது. திருமணத்துக்காக அமைக்கப் பட்ட அலங்காரங்கள் கலைக்கப் படாமல், சோக நிகழ்வுக்குச் சாட்சியாக நிற்கின்றன.
கொலையான ஜெய்ஸ்ரீ குழந்தைகள் நல மருத்துவராவார். மணமகன் அறுவை சிகிச்சை நிபுணராவார்.